search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி சண்டை"

    கா‌‌ஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    கா‌‌ஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது, ஓரிடத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

    சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர், பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

    இதில், 2 பயங்கரவாதிகள் பலியானார்கள். அவர்களின் பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறியும் பணி நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
    காஷ்மீர் பண்டிபோரா பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். பணய கைதியாக பிடித்துவைத்திருந்த ஒருவரை மீட்டனர். #JammuKashmir #ArmyEncounter
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் பண்டிபோரா பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். பணய கைதியாக பிடித்துவைத்திருந்த ஒருவரை மீட்டனர். மற்றொருவரை மீட்க முயற்சி நடக்கிறது.

    காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள ஹஜின் மிர் மொஹல்லாவில் பயங்கரவாதிகள் ஒரு இடத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாநில போலீசாரின் சிறப்பு படை, ராணுவம், மத்திய ஆயுதப்படை போலீசார் அடங்கிய கூட்டுக்குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை நெருங்கியதும் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தானியங்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    பாதுகாப்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன், பயங்கரவாதிகள் பணய கைதியாக பிடித்துவைத்திருந்த அப்பாவி ஒருவரை மீட்டனர். மேலும் ஒருவர் அங்கு சிக்கியிருப்பதாக தெரியவந்தது. அவரை மீட்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    துப்பாக்கி சண்டை நடைபெறும் தகவல் அறிந்து போராட்டக்காரர்கள் அந்த பகுதிக்கு விரைந்துவந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்கினர். இதைத்தொடர்ந்து அவர்களை கலைப்பதற்காக பாதுகாப்பு படையினர் முதலில் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். தொடர்ந்து சிறு குண்டுகளால் துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர்.  #JammuKashmir #ArmyEncounter
    சத்தீஸ்கரில் இன்று நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார். #CRPFjawan #Chhattisgarhblast
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், தன்ட்டேவாடா மாவட்டத்துக்குட்பட்ட அரன்பூர் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, மத்திய ரிசர்வ் படை போலீசாருடன் விரைந்து சென்ற கூட்டப்படையினர் அந்த இடத்தை இன்று மாலை முற்றுகையிட்டனர்.

    அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 6 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு வீரர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். #CRPFjawan #Chhattisgarhblast
    உத்தர பிரதேசத்தில் குற்றவாளியை பிடிக்கச் சென்றபோது நடந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்தார். #UPEncounter #Constablekilled
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா நகரில் குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்ட ஷிவாவ்தார் என்பவரை பிடிப்பதற்காக போலீசார் நேற்று இரவு சென்றனர். ஷிவாவ்தார் இருந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார்,  அவரை சரண் அடையும்படி கூறினர். ஆனால்,  ஷிவாவ்தார், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளான். இதனையடுத்து போலீசாரும் பதில்  தாக்குதல் நடத்தினர்.

    சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் போலீஸ் தரப்பில் கான்ஸ்டபிள் ஹர்ஷ் சவுத்ரி (26)உயிரிழந்தார். போலீசாரின் பதில் தாக்குதலில் ஷிவாவ்தார் பலத்த காயம் அடைந்தான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன், சிறிது நேரத்தில் உயிரிழந்தான்.

    இந்த என்கவுண்டரில் உயிரிழந்த கான்ஸ்டபிள் குடும்பத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த கான்ஸ்டபிளின் மனைவிக்கு ரூ.40 லட்சம் மற்றும் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

    உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றதில் இருந்து இதுவரை 3000க்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் நடந்துள்ளன. இதில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 78 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 7 போலீசார் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #UPEncounter  #Constablekilled
    ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாவட்டத்தில் தலிபான்கள் பதுங்குமிடத்தின் மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். பலர் கைதாகியுள்ளனர். #AfghanSoldiers #Talibanskilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
     
    இந்நிலையில், கஸ்னி மாகாணத்தில் உள்ள தேஹ்யாக் மாவட்டத்துக்குட்பட்ட சுலிமன்ஸாய் கிராமத்தில் தலிபான்கள் ரகசியமாக கூடி ஆலோசனை கூட்டம் நடத்துவதாக ராணுவ உயரதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த கிராமத்துக்கு ராணுவ வீரர்கள் விரைந்தனர். அப்போது தலிபான்களுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 14 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15 பேர் கைது செய்யப்பட்டனர்.  #AfghanSoldiers #Talibanskilled
    காஷ்மீரில் 2 இடங்களில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார். #JK #MilitantsKilled
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ரெட்ஹனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மாநில போலீசார் ஆகியோர் இணைந்து அந்த வீட்டை நள்ளிரவில் முற்றுகையிட்டனர்.

    அவர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. வீடுகள் நிறைந்த பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    5 மணி நேரம் நடந்த இந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்கள் யார்? எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

    இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார். அங்கிருந்த ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.

    இதேபோல மற்றொரு என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்தது.

    புல்ஹமா மாவட்டம் டிரால் பகுதியை அடுத்த ஹபு என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்தில் 20 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JK #MilitantsKilled

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சத்தீஸ்கரில் மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறார்கள்.

    இதையும் மீறி அங்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலையும் மீறி மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கிஸ்தாராம் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் நக்சல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது நக்சலைட்டுகள் துப்பாக்கியால் தாக்கினார்கள். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. போலீசாரின் தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்த என்கவுண்டர் சம்பவத்தில் 2 போலீசாரும் பலியானார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சுடுதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் உள்ள அவந்திபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர சண்டை நடைபெற்றது. இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். #PulwamaEncounter
    சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டைக்கு நடுவே தூர்தர்ஷன் ஊழியர் மூர்முகுத் சர்மா தனது தாயாருக்காக அனுப்பிய வீடியோ பதிவை தூர்தர்ஷன் வெளியிட்டுள்ளது. #Chhattisgarh #NaxalsAttack #DoordarshanCrewKilled
    ராய்ப்பூர்:

    சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நேற்று முன்தினம் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், 2 போலீசாரும், அவர்களுடன் சென்ற தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாகுவும் பலியானார்கள். தூர்தர்ஷன் நியூஸ் சேனலின் உதவியாளர் மூர்முகுத் சர்மா, பத்திரிகையாளர் தீரஜ் குமார் ஆகியோர் உயிர்தப்பினர்.

    முன்னதாக, துப்பாக்கி சண்டைக்கு நடுவே, மூர்முகுத் சர்மா தனது தாயாருக்காக பேசி, வீடியோவில் பதிவு செய்தார். ஒரு கால்வாய்க்குள் படுத்தபடி அவர் பதிவு செய்த வீடியோவில், துப்பாக்கி குண்டுகள் சீறிப்பாயும் காட்சி தெரிகிறது.

    அதில், ‘அம்மா, இந்த தாக்குதலில் நான் கொல்லப்படலாம். உயிர் பிழைத்தால் நன்றி சொல்வேன். மரணம் என்னை நெருங்கியபோதிலும் எனக்கு பயம் இல்லை’ என்று அவர் பேசி உள்ளார். அந்த வீடியோவை, ‘டுவிட்டர்’ பக்கத்தில் தூர்தர்ஷன் வெளியிட்டுள்ளது. #Chhattisgarh #NaxalsAttack #DoordarshanCrewKilled
    காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #MilitantsKilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்துக்குட்பட்ட கிரால்ஹார் பகுதி வழியாக ஒரு கார் சந்தேகத்துக்கிடமான வகையில் வேகமாக வருவதை கண்ட பாதுகாப்பு படையினர் அந்த காரை நிறுத்தி சோதனையிட முயன்றனர்.



    சற்றும் எதிர்பாராத வகையில் காரில் இருந்தவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டவாறு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் காரினுள் இருந்த இரு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். #MilitantsKilled
    காஷ்மீரில் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் ராணுவவீரர்கள் 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். #JKEncounter #MilitantKilled
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் தூரு சாகாபாத் என்கிற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தனர். அவர்களை தங்களிடம் சரணடைந்துவிடும் படி போலீசார் எச்சரித்தனர். மாறாக பயங்கரவாதிகள், போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.



    இதில் 3 ராணுவ வீரர்களின் உடலை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை சக வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ராணுவவீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

    இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மற்றொரு பயங்கரவாதி அங்கிருந்து தப்பி ஓடினார். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இதே போல் புட்காம் மாவட்டம் பான்சான் என்கிற கிராமத்தில் மசூதி ஒன்றுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை ராணுவவீரர்கள் சுற்றிவளைத்தபோது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. அப்போது ராணுவ வீரர்கள் சுட்டதில் பயங்கரவாதிகள் 2 பேர் உயிர் இழந்தனர்.

    மற்றொரு சம்பவமாக தலைநகர் ஸ்ரீநகரில் நூர்பாக் என்கிற இடத்தில் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவவீரர்கள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார்.

    இதனையடுத்து, தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகரில் செல்போன் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. #JKEncounter #MilitantKilled
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள கான்டி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து, அந்த காட்டுக்குள் இன்று காலை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காட்டின் நடுப்பகுதிக்கு சென்றபோது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

    பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கு நடந்துவரும் துப்பாக்கிச் சண்டையில்  படுகாயமடைந்த இரு வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஒரு வீரர் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்ததும் கான்டி வனப்பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #Kupwaraencounter #Soldiermartyred
    ×